Sans-serif

Aa

Serif

Aa

Font size

+ -

Line height

+ -
Light
Dark
Sepia

SOGIESC and Queer Malaysian Indians: Embracing Diversity and Identities

The Gender Bear SOGIESC infographic by Queer Lapis (available in English, BM, and Mandarin).

By Queer Malaysian Indians
Published on 29 July 2023

Understanding SOGIESC (Sexual Orientation, Gender Identity, and Expression, and Sex Characteristics) is important for Queer Malaysian Indians as it helps recognize and embrace the diversity of human identities and experiences. 

It means acknowledging that people can have different sexual orientations, like being gay, lesbian, bisexual, or asexual, and that gender is not limited to male or female but can include non-binary, genderqueer, or transgender identities. 

Understanding SOGIESC promotes inclusivity, empathy, and respect for everyone’s unique journey, combating discrimination and stereotypes. It also encourages the creation of safe spaces and supportive communities where individuals can freely express themselves and celebrate their identities. 

By educating ourselves and others about SOGIESC, we contribute to a more inclusive and equitable society that embraces the beauty of diversity.

SOGIESC எனப்படும் பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம் &  வெளிப்பாடு மற்றும் பாலின பண்புகளை  புரிந்துகொள்ளுதல்,  மலேசிய இந்தியப் புதுநர்களுக்கு  முக்கியமானது. இது மனித அடையாளம்  மற்றும் அனுபவத்தின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கவும் அரவணைக்கவும் உதவுகிறது. 

ஒருவர் மகிழ்வனாகவோ, மகிழினியாகவோ, இருபாலீர்ப்புடையவராகவோ, பாலீர்ப்பு அற்றவராகவோ இருப்பதை அங்கீகரிப்பதாக இது பொருள்படுகிறது. அதேவேளை, பாலினம் என்பது ஆண், பெண் மட்டுமல்ல, மாறாக பாலின ஈர்மறைக்கு அப்பாற்பட்டவர், புதுநர்கள், மகிழ்வன் அல்லது மகிழினி போன்றவர்களையும் உள்ளடக்கக்கூடியது என்பதை அங்கீகரிப்பதாகவும்  அமைகிறது.    

SOGIESC-ஐப் புரிந்துகொள்வது என்பது, முழுமைத்தன்மை, பரிவு,  ஒவ்வொருவரின் தனிப்பட்ட பயணத்தை மதிப்பது , பாகுபாட்டையும் மாறாநிலையையும் எதிர்ப்பது போன்றவற்றை ஆதரிப்பதாகும். அதுமட்டுமில்லாமல், ஒருவர்  சுதந்திரமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் அவரவர் அடையாளங்களைப் போற்றவும் போதிய இடமளிப்பதோடு  ஆதரவு தரக்கூடிய சமூக உருவாக்கத்தையும் இது ஊக்குவிக்கிறது

SOGIESC பற்றி நாம் தெரிந்துகொள்வதோடு  மற்றவர்களுக்கும் தெரிவிப்பதன் மூலம், சமூக பன்முகத்தன்மையின் சிறப்பு பேணப்படுகின்றது.    மேலும்,  அனைவரையும் அரவணைக்கும், சமத்துவமிக்க, சமூகத்திற்கு நாம் வழி வகுக்கின்றோம் .

The intersectionality of Indian Malaysian and Queer identity recognizes that individuals may experience multiple forms of discrimination and marginalization based on their ethnicity and sexual orientation or gender identity.

It acknowledges that being both Indian Malaysian and Queer can influence one’s experiences, challenges, and opportunities. Understanding this intersectionality allows for a deeper appreciation of the unique struggles faced by Queer individuals within the Indian Malaysian community, such as cultural expectations, familial pressures, and societal norms. It also highlights the importance of creating spaces that address the specific needs and concerns of Queer Indian Malaysians, promoting inclusivity, acceptance, and empowerment. 

By embracing and celebrating this intersectionality, we can foster a sense of belonging and support for Queer Indian Malaysians, encouraging them to live authentically and with pride in both their cultural heritage and their Queer identities.

மலேசிய இந்தியர்களின் உட்பிரிவு  மற்றும் புதுநர்  அடையாளம்,  தனிநபர்கள் தங்கள் இனம் மற்றும் பாலியல் நோக்குநிலை அல்லது பாலின அடையாளத்தின் அடிப்படையில் பல வகையான பாகுபாடுகளையும் புறந்தள்ளலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதைத் தெரிவிக்கிறது.

மலேசிய இந்தியராகவும் புதுநராகவும் இருக்கும் ஒவ்வொருவரின், அனுபவம், சவால்கள், வாய்ப்புகள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படக்கூடும்  என்பதை இது உணர்த்துகிறது. இந்த உட்பிரிவைப்  புரிந்துகொள்வது, மலேசிய இந்திய சமூகத்தில் உள்ள புதுநர்கள்  எதிர்கொள்ளும் பண்பாட்டு எதிர்பார்ப்புகள், குடும்பத்தினர்களின் கட்டாயங்கள், சமூக கட்டமைப்புக்கள்  போன்ற சிக்கல்களை ஆழமாக மதிப்பிட உதவுகிறது. மலேசிய இந்திய புதுநர்களின் குறிப்பிட்ட தேவைகளையும் கவலைகளையும் எதிர்கொள்வதற்கான இடத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இது வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வேளை, அத்தரப்பினரை  இணைத்துக்கொள்ளுதல், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கு வலுவூட்டவும்  ஊக்குவிக்கிறது. 

இந்த உட்பிரிவை அன்போடு ஏற்று, கொண்டாடுவதன் மூலம், மலேசிய இந்திய புதுநர்கள், தங்களில் ஒரு பகுதியினர் என்ற உணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கான ஆதரவைப் பெருக்க முடியும். இந்தியர்களின் பண்பாடுப் பெருமையை நழுவவிடாமல், தங்களின் புதுநர் அடையாளத்தையும் சேர்த்துக் கொண்டு அவர்கள் உண்மையாகவும் பெருமையுடனும் வாழ ஊக்குவிக்கலாம்.

Self-love and self-acceptance are essential for Queer Malaysian Indians to embrace their identities and lead fulfilling lives. It means recognizing that their sexual orientation, gender identity, and expression are valid and beautiful parts of who they are. 

Practicing self-love involves treating themselves with kindness, compassion, and respect, even in the face of societal pressures or discrimination. 

It’s important to surround themselves with a supportive community, seek out resources and spaces that celebrate their identities, and prioritize their mental and emotional well-being. Remember that self-love is a journey, and it’s okay to seek support from friends, loved ones, or professionals to navigate any challenges along the way.

மலேசிய இந்தியப்  புதுநர்கள் தங்கள் அடையாளங்களைப் பேணவும்  நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கு சுய அன்பும், சுய ஏற்புடைமையும் அவசியம். அவர்களின் பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம் மற்றும் வெளிப்பாடு ஆகியவை அவர்கள் யார் என்பதற்கான மிகச் சரியான, அழகுமிக்க கூறுகள் என்பதை அங்கீகரிப்பதாகவும் இது அமையும்.

சமூக அழுத்தங்களையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டாலும், இரக்கம், பரிவு, மரியாதை, ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது, சுய அன்பை நடைமுறைப்படுத்துவதைக் குறிக்கிறது. 

தங்களுக்கு ஆதரவளிக்கும் சமூகத்தை தங்களுடன் இணைத்துக்கொள்வது,  தங்கள்  மனநலத்துக்கும் உணர்வுகளுக்கும் முன்னுரிமை அளித்து தங்களின் அடையாளங்களைப் போற்றும் மூலங்களையும் தரப்புகளையும் அடையாளங்கண்டு கொள்வது மிக முக்கியம். சுய அன்பு என்பது ஒரு நீண்ட பயணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்தப் பயணத்தில் ஏற்படும் சவால்களைத் தகர்க்க நண்பர்கள், அன்புக்குரியவர்கள் அல்லது நிபுணர்களிடம் இருந்து உதவி பெறுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதே.

Queer Malaysian Indians can seek help in Malaysia through various avenues. They can reach out to NGOs which offer counseling, support groups, and resources for the LGBTQ+ community. 

Medical professionals with expertise in LGBTQ+ health, such as those at PT Foundation’s clinic, can provide inclusive and knowledgeable healthcare services. 

Online communities and platforms offer virtual support, information, and connections to local LGBTQ+ resources. It’s important to connect with like-minded individuals and allies through LGBTQ+ social and support groups, which can be found through online platforms, community centers, or LGBTQ+ events. 

மலேசிய இந்தியப் புதுநர்கள் பல்வேறு வழிகளில் மலேசியாவில் உதவியை நாடலாம். LGBTQ+ சமூகத்துக்கு  ஆலோசனைகள், ஆதரவு குழுக்கள் மற்றும் மேற்கோள்களை வழங்கும் அரசு சாரா இயக்கங்களை அவர்கள் அணுகலாம்.

PT Foundation கிளினிக்கில் உள்ள மருத்துவ நிபுணர்களைப் போன்று, LGBTQ+ நபர்களின் சுகாதார மருத்துவ நிபுணர்கள்,   அறிவுசார்ந்த, பொதுநலமிக்க சுகாதார சேவைகளை வழங்க முடியும்.

இணைய சமூகங்களும் தளங்களும் உள்ளூர் LGBTQ+ சமூகத்துக்கான  மெய்நிகர் ஆதரவு, தகவல் மற்றும் தொடர்புகளை வழங்குகின்றன. இணையத் தளங்கள், சமூக மையங்கள், LGBTQ+ நபர்களுக்கான நிகழ்ச்சிகளின் மூலம் மாற்று LGBTQ+ சமூக ஆதரவுக் குழுக்கள் வழியாக  ஒருமித்த எண்ணமுடைய நபர்களுடனும், ஆதரிக்கும் குழுக்களுடனும் இணைந்திருப்பது முக்கியம்.