Love and Resilience: Stories from Queer Indian Malaysians
காதலும் மீ்ட்சியும்: மலேசிய இந்தியப் புதுநர்களின் கதைகள்
Tamil translation below
Illustration by Veshalini Naidu
Discriminated within an already disenfranchised community, queer Indian Malaysians struggle just to live day-to-day lives. ILAIYA BARATHI PANNEERSELVAM speaks to several individuals whose voices have been drowned out, forgotten and stifled.
N.B. Much effort was taken to represent the diversity within the queer Indian Malaysian community as best we could. However, due to various factors, Between The Lines only managed to speak to those individuals quoted in the story below. They, nevertheless, offer important glimpses into the community’s joys and struggles.
Written by ILAIYA BARATHI PANNEERSELVAM
Published on 25 July 2023
Discriminated against within an already disenfranchised community, queer Indian Malaysians struggle just to live day-to-day lives. ILAIYA BARATHI PANNEERSELVAM speaks to several individuals whose voices have been drowned out, forgotten and stifled.
N.B. Much effort was taken to represent the diversity within the queer Indian Malaysian community as best we could. However, due to various factors, Between The Lines only managed to speak to those individuals quoted in the story below. They, nevertheless, offer important glimpses into the community’s joys and struggles.
MALAYSIA is a nation of rich and diverse cultures. Yet it is this same uniqueness that has often resulted in the marginalisation of minority groups.
Indian Malaysians are one such group. And within this already disenfranchised minority is another whose diverse and different voices have not so much been silenced but often completely drowned out — queer Indian Malaysians.
The story of the Indian community in Malaysia is a fascinating one of migration and cultural adaptation. It is also one of struggle, prejudice, and a system that perpetuates and reinforces binary gender norms.
The complexity and richness of the Indian Malaysian experience, thus, means that the Indian Malaysian LGBTQ experience is equally complex and nuanced, and this is why the accounts of those we spoke to offer many different perspectives.
It is not the complete tale by any measure. Indeed, one thing to note right off the bat is that middle- and upper-middle-class Indian Malaysian LGBTQ individuals navigate their identities via different experiences from those who live hand to mouth. Nevertheless, these are the stories of those who agreed to speak to us. And they deserve to be told, and heard.
‘Right’ and ‘wrong’
“I’d always known that I was different … that I was attracted to men as a child,” Nickey (his chosen name), a drag performer, says. “(But) I think growing up, it did not register to me as an attraction. Around puberty (however), I’d see a guy that I found attractive, and for some reason, I’d just look at him.”
He adds, however, that he always felt like he was being “policed” at home, and conditioned to conform. That there was a “correct” way for one to live and be.
Families condition us from a young age with regard to this “correct” way. Passed down from generation to generation, this conditioning takes the form of beliefs and stories that relate to the past. Children then learn and internalise their families’ and communities’ values, beliefs, and practices throughout their development, with the stories and anecdotes serving as informal guidelines.
Unfortunately, this state of affairs results in the reinforcement of a binary perspective, primarily from a patriarchal standpoint, of certain things having to be a certain way. This explains why pink is deemed a “girly” colour or why physically challenging activities are considered “manly”.
“Don’t listen to girls’ music, boys can’t or boys don’t cry, and boys don’t wear pink. Don’t walk like that, that’s not how a boy walks … there was very strict policing of my femininity,” Nickey says. And the conditioning is even worse in Indian Malaysian families, as it is in most Asian families.
“In an Asian family, the family bond is usually quite strong, and that results in remarks like ‘you must make the family proud’,” Chong Yee Shan, an LGBTQ activist, says, adding that there is also the idea of “shame”.
Chong Yee Shan at the Women’s Day March 2023 (Photo: Choo Chon Kai)
Faith and consequence
Kevin (his chosen name) explains that his experience wasn’t very different from others with strict families. However, what made coming to terms with his identity tougher was that he’d grown up in a family where speaking one’s thoughts and feelings was never an option.
There was also the small matter of having been brought up Christian.
This is why, at age 23, he turned to the internet and typed his all-important question into the Google search bar: Is it OK for me to be gay?
“I wanted as much confirmation as I could get on whether it was OK (to be homosexual and Christian). My thoughts were feeling very rushed at that point … I had wanted to be straight. I wanted badly to be straight. But there was also a part of me that knew that maybe I wasn’t. But that wasn’t apparent (to me) until I came out to myself,” he says.
Kevin’s conflicted emotions are understandable. After all, most, if not all, Christian theologians and denominations consider homosexuality a sin. But the situation isn’t any less complex in Hinduism.
Thilaga Sulethirah, the founder of Justice for Sisters, points specifically to the deification of transwomen (thirunangai in Tamil) in Hindu-Indian society and how that suggests a level of greater acceptance of queer individuals.
Thilaga recounts the experience of a transwoman they know: “This woman goes to the temple frequently, and (the devotees), like young couples or people who want to have children, ask for her blessings. There’s also this temple in Klang where devotions to a certain goddess are held and transwomen come to celebrate her festival in green saris.”
Despite that, however, acceptance is neither simple nor straightforward, as Tharani (her chosen name), a transwoman, says.
Indian Malaysians, Tharani explains, tend to view transwomen as a joke. She says she’s been insultingly called “ombathu” (a derogatory remark in Tamil used on effeminate individuals) and cat-called, even by friends and family members. Yet worse, she says, is that one of those who’d refused to accept her was her own father.
“My dad asked why I am behaving like an ‘ombathu’ and insulted me multiple times.” Tharani says she is thankful, though, for the presence of one unwavering pillar of strength — her mother. But even then, it took almost 4 years to make her understand that Tharani’s soul had been trapped in a male body since her birth.
Race, class and family
A group of Indian people in British Malaya, 1898 (Photo: British Library / Wikimedia Commons)
The migration of Indians to Malaysia (previously Malaya) dates back to the 19th century when labourers were recruited for plantations. Essentially, both colonial authorities and the plantation industry saw Indian labour as a long-term, cheap and reliable replacement for lost slaves that would be able to meet the growing demands of the land and the British Empire’s plan for expansion.
Despite this fact, however, as well as the community’s role in developing both colonial and post-colonial Malaysia, and its efforts to integrate with the larger Malaysian society,
a large majority remain poor and feel excluded from various aspects of daily life.
And this, coupled with certain cultural traits, practices and hangups of the community, make queer Indian Malaysians often feel like they are facing insurmountable odds.
Kevin explains that is why many people choose to hide their true selves and live in constant fear of getting “caught”, especially by their families.
He speaks about a particularly painful episode from his youth when, unprovoked, his father pinned him to a wall, and ordered him “to not be gay”.
Father and son had just been chatting in the living room of the family home, when out of nowhere and for no apparent reason, Kevin’s father charged at him. “He had a finger to my face, telling me that I should not be gay. ‘Just be normal like everyone else.’ I was terrified,” he recalls.
Still, perhaps, Kevin’s dad attacking him was not “unprovoked”, as it were. Perhaps it had all to do with the prevalent cultural notions of “shame”, “what will others say?” and “don’t rock the boat”.
JFS’s Thilaga explains: “Typically, queer individuals are harassed by people of their own ethnicity, like Indian queer women are often harassed by Indian men. So there’s the patriarchy within. For some people, meanwhile, there’s a sense (that) we are already so marginalised, (so) you shouldn’t be bringing shame.”
They explain further that it doesn’t always follow that more well-to-do, English-speaking Indian Malaysians are more tolerant of diversity.
“Even in some upper- and middle-class households, we have seen things like conversion practices take place. There have also been cases where people are taken to shamans, like samiyars, to perform rituals and to ‘buang sial’ (remove bad luck),” they say.
What is true, neverthless, is that working class individuals face a lot of violence when they come out. They add, however, that there are always layers, and there’ve have been many instances of LGBTQ individuals being accepted by their working-class parents when the latter start to feel, “I don’t have a problem with my child (being) like this”.
Discriminated from within
Interestingly, the discrimination endured by queer Indian Malaysians extends to being ostracised by other queer persons. Indeed, there appears to be a prevalent othering of Indian Malaysians.
“I have had people avoid me or look at me in disgust as I walked by. Doing group assignments in university was difficult because I was a gay Indian. Even the queer community hasn’t really grown out of the mentality of racism, whereby Indians are
unclean, not good-looking, and so on,” Smith, (not his real name), says.
Thilaga confirms this.
“If you’re on … some dating platform, you might get messages like, ‘No dark-skinned people’, ‘No Indians,’ or (some) other racist (message). In that sense, you face that sort of colourism and racism within the gay community (that one would find outside). And that then limits your ability to find relationships.”
Coming out
With so many challenges, thus, it’s no wonder that many queer Indian Malaysians consider repressing their true selves and not coming out at all.
Raghav (his chosen name), an information technology student at a local university, says that he himself had never thought he would come out. He’d spent years deliberating about revealing his true self to his family, in fact. Yet in a moment that he describes as “right robbed”, a friend revealed his truth to his family.
There was awkwardness at first, of course, but Raghav says that he was overwhelmed by the positive reception of his family. Despite their differences, their unconditional love and acceptance of him, he says, has buoyed his confidence. And that, was the turning point to accepting himself.
“They said, ‘Whatever it is, we are happy for you.’”
The “problem” with Raghav’s story, however, is that it is hard to gauge how family members and friends will react. Importantly, too, the reception is not always positive.
Smith, for example, holds out little hope of being accepted by a family in which even the wearing of henna and earrings by men was forbidden. Indeed, they say that “it makes no difference” whether their family accept Smith for who they are or not.
Kevin, meanwhile, has decided the best solution in his particular situation is to hide who he really is from his colleagues and acquaintances. This, he knows, is not ideal. But it is how he has endeavoured to cope.
“We may be setting ourselves up for a multitude of disappointments as we try so hard to fit into the shoes of the good son, husband or father,” he says. “… we have tried our best to adapt. (Yet) it (might) come at a great cost. Some of us have forgotten what love actually is and what being a human being is all about; that we are allowed to feel this wide spectrum of emotions and desires.”
And the greater tragedy, perhaps, is that when one forgets what love is, one forgets to love oneself. This, in fact, is what Tharani experienced at age 14, when she attempted to take her own life.
“I had no desire to continue living because I could no longer endure the agony,” she says.
Demonstrators brandish an LGBTQ-affirming sign in Tamil at the Women’s Day March, 2023. (Photo: Ilaiya Barathi Panneerselvam)
Where’s the support?
There’s been a dramatic rise in the prevalence of mental disorders in Malaysia in recent years, not least due to urbanisation, globalisation, and increased stress. There has
also been an increase in suicides, especially during the worst of the Covid-19 pandemic.
Amid this, many LGBTQ persons have suffered in silence due to their being few, if any, avenues to address their mental health challenges.
This explains the reason for the louder calls for health facilities to offer safe mental health treatment for queer persons and why there has been more discussion on LGBTQ affirmative therapy.
Affirmative therapy, in a nutshell, is a form of psychotherapy that aims to validate and advocate for the needs of queer clients. Therapists, generally, express their acceptance of their lesbian, gay, bisexual, and transgender clients in words and actions; the aim being to help LGBTQ individuals feel comfortable with their identity and desires, which then leads to healthier and more fulfilling lives.
One of the problems in Malaysia, however, is that we just don’t have many LGBTQ-affirmative psychologists. And that means that LGBTQ Malaysians suffering from prejudice or minority stress aren’t getting the support they need.
Minority stress relates to the theory that sexual minorities face unique and hostile stressors like homophobia and victimisation, and these, consequently, have negative effects on health.
Thilaga explains: “Because we are minorities, we face additional stress because, for one, we are criminalised. So, there’s additional fear when we go out. When we are criminalised, discrimination can take place with impunity. And you have less confidence in the state or institutions to deal with the discrimination you face.
“In that sense, there’s a lot of fear. There’s (also) a lot of isolation, and a lot of times, it accumulates into stress.” And in the case of queer Indian Malaysians, there is “double marginalisation”.
“Indian Malaysian LGBTQs face more discrimination compared to other races. And a B40 Indian LGBTQ person is facing accentuated discrimination,” Yee Shan concurs.
“Furthermore, the language barrier is another issue for many Indian Malaysian LGBTQ individuals, as they have limited access to many resources, including social support, legal support, mental health support, and many more.
“So when they are discriminated against due to their sexual or gender identity, they don’t know where to get support, and even worse, they don’t know they can get support.”
Thilaga adds that there is an ostensible correlation between stress and discrimination or anti-LGBTQ sentiment. As a result, the Indian Malaysian LGBTQ community generally practices self-censorship and refrains from stating things openly, whether online or offline.
This is why, they say that self-care and speaking with therapists are essential. Nevertheless, assistance need not be limited to therapists, but also LGBTQ-affirming groups.
“Now we are in a space where human rights groups are well connected to LGBT groups. They will be able to connect you. We are also in a time where a lot of human rights groups are more queer-affirming, and provide the services or support one would need.”
Both Thilaga and Yee Shan stress, nevertheless, that they themselves don’t “help” but rather facilitate the improvement of Malaysian LGBTQ individuals’ lives.
Thilaga says: “I wouldn’t say it’s ‘helping’ because I’m a queer person myself. All of the things that I do affect me as well. I’m not removed.”
Resilience and hopefulness
Nickey (Photo: Haus of RN)
The nuances and complexities of the queer Indian Malaysian experience mean that there is no one-size-fits-all solution. And this, then, is why while some individuals are positive about the future and their present, not everyone feels the same.
“Looking back, these experiences have made me so much stronger and more resilient, which is why I drag or do whatever I like,” Nickey says. “If someone says something to me now, I will fight back.”
Raghav, however, is not so sure. He says that while he is fortunate to have his family’s full support, the harsh reality is that Malaysia doesn’t want LGBTQ individuals. This is why he can’t see a future for himself here.
Smith, meanwhile, suggests that perhaps what is most important is to focus on the light; on the support that groups and individuals offer Indian Malaysian LGBTQ persons here, and the positive experiences people have had.
They paraphrase Prof Albus Dumbledore in Harry Potter and the Prisoner of Azkaban: “Happiness can be found even in the darkest of times if one only remembers to turn on the light.”
——————————————-
If you’re overwhelmed, need help, or just a listening ear, you can contact the organisations listed here: www.justiceforsisters.org/balik-pangkal-jalan/support
Or these mental health services:
Befrienders
0376272929
Befrienders.org.my
Sneham Welfare Organisation Malaysia
0102005722
www.facebook.com/snehammalaysia
Malaysian Mental Health Association
0327806803
Mmha.org.my
KKM-Mercy Malaysia Hotline
0329359935
Talian Kasih
15999
_______
Story illustration
The main image was illustrated by Veshalini Naidu. Veshalini is a multidisciplinary artist who merges poetry, visual arts and theatre in their response to gender, sexuality
and race in Malaysia.
About the writer
Ilaiya Barathi Panneerselvam is a writer, activist and academic in the field of communication. His involvement in causes near and dear to his heart stems from his strong feelings about the injustices meted out to the poor, the powerless, and the working class in both film and society. Twitter @barathiSelvam10
This article was originally published in English on Between The Lines, a biweekly email newsletter that sums up the main news of the day with context — and a fair bit of sass. What you get is an easy read that brings you up to speed on what’s happening in Malaysia.
***
சிறுபான்மை சமுதாயமாக விளங்கும் ஒரு நாட்டில் மலேசிய இந்திய புதுநர் தரப்பினர் அன்றாட போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்கிறார் இளையபாரதி பன்னீர் செல்வம்.
மலேசிய இந்திய பண்முகத்தன்மை கொண்ட புதுநர் தரப்பினரிடையே ஒரு பிரதிநித்துவத்தை மேற்கொள்வதற்கான அதிக முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எனினும் பல காரணங்களால் கீழ்கண்ட கதைகளில் கூறப்பட்டுள்ள னிநபர்களிடம் மட்டுமே எங்களால் பேச முடிந்தது. இச்சமுதாயத்தினரின் போராட்டமும், மகிழ்வும் பற்றிய ஒரு சிறு துளி தான் இங்கே கூறப்பட்டுள்ளது.
மலேசியா வளமான, பல்வகை கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு நாடாகும். ஆனால் இதே தனித்துவம் தான் பல வேளைகளில் சிறுபான்மைக் தரப்பினரை புறம் தள்ளவும் காரணமாகவும் அமைந்துள்ளது.
மலேசிய இந்தியர்கள் அத்தரப்பினரில் ஒரு பகுதியாக இருக்கின்றனர். ஏற்கனவே எதிலும் சேர்த்துக் கொள்ளப்படாத ஒரு தரப்பினராக இருக்கும் இச்சிறுபான்மையினருக்குள்ளேயே, பலதரப்பட்ட மாறுபட்ட கருத்துக்கள்.
இதில் சிறுபான்மையினராக இருக்கின்ற புதுநர் சமூகத்தின் குரல் முற்றிலுமாக கேட்கப்படுவதில்லை.
இந்தியர்கள் மலேசியாவிற்கு வருகை புரிந்து இங்கேயே தங்களது வாழ்வாதாரத்தை துவக்கி தங்களது கலை கலாச்சாரத்தை கட்டிக் காத்து வருவது சுவாரசியமான ஒன்றாக இருந்தாலும், இந்தியர்களிடையே ஒரு சிறு குழுவாக இருக்கக்கூடிய புதுநர் தரப்பினருக்கு இது ஒரு போராட்டமான, அநீதியான , ஈரிணை வழக்கங்களை (பைனரி ஜெண்டர் நோர்ம்ஸ்) வலுக்கட்டாயப்படுத்தும் ஒரு கட்டமைப்பாகும்.
மலேசிய இந்திய சமூகத்தின் அனுபவங்கள், சிக்கலும் செழுமையும் கொண்டவை. ஆகையால் மலேசிய இந்திய LGBTQ அனுபவமும் சிக்கலுடன் நுணுக்கமுமானது. அதனால்தான் அப்படிப்பட்ட சிலரிடம் பேசிய வகையில் பலவிதமான கண்ணோட்டங்களை அறிந்து கொண்டோம்.
எந்த வகையிலும் இது முழுமையான கதை அல்ல. உண்மையில், இதில் கவனிக்க வேண்டிய ஒன்று நடுத்தர மற்றும் மேல்-நடுத்தர வர்க்க இந்திய மலேசிய LGBTQ தனிநபர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கும்; கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எனினும் எங்களிடம் பேச முன் வந்தவர்களின் கருத்துக்களை இதில் முன் வைத்துள்ளோம். ஏனென்றால் அவர்களின் குரலும் கேட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சரி &தவறு*
※நான் வித்தியாசமானவன் என்பதை நான் எப்போதும் அறிவேன் ’ சிறுவயதில் நான் ஆண்களின் பால் ஈர்க்கப்பட்டேன் ※ என்று பெண் வேடமிடும் நடிகரான நிக்கி (அவரது புனைப்பெயர் ) கூறுகிறார். ※(ஆனால்) நான் வளரும் போது, அதை நான் ஈர்ப்பாக கருதுவதில்லை. எனினும் பருவமடைந்த போது, ஒரு அழகான ஆண்மகனை பார்க்கும் போது, ஏதோ ஒரு காரணத்திற்காக, அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
எனினும் நான் எப்போதும் வீட்டுக் காவலில் இருப்பது போன்ற உணர்வு எனக்குள் இருந்து கொண்டே இருக்கும், என்று அவர் மேலும் கூறினார். இப்படித் தான் வாழ வேண்டும்; இது தான் வாழ சரியான வழி என்றும் அடிக்கடி கூறி தன் மேல் திணிக்கப்பட்டது என்றார்.
இது தான் சரியான வழி என்று சிறு வயதிலிருந்தே குடும்பங்கள் எங்களை நிர்பந்திக்கின்றன. வழி வழியாக பல தலைமுறைகளாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, வருகின்ற தலைமுறையினர்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இது தான் சரியான வழி என்று குழந்தைகள் பின்னர் அவர்களின் வளர்ச்சி முழுவதும் தங்களின் குடும்பங்கள், சமூகங்களின் விழுமியங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகளை கற்று உள்வாங்கி, கதைகளையும்,
நிகழ்வுகளையும் முறைசாரா வழிகாட்டுதல்களாக செயல்படுகின்றன.
எதிர்பாராதவிதமாக இந்த விவகாரம் ஈரிணையான முன்னோக்கை வலுப்படுத்துகிறது, முதன்மையாக ஆணாதிக்க நிலைப்பாட்டில் இருந்து, சில விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் இருக்க வேண்டும். இளஞ்சிவப்பு ஏன் ※பெண்§ நிறமாக கருதப்படுவதோடு உடல் ரீதியாக சவாலான செயல்கள் ஏன் ※ஆண்மை§ என்று கருதப்படுகின்றன என்பதை இது விளக்குகிறது.
※பெண்களுக்கான இசையைக் கேட்காதீர்கள், ஆண்களால் அழ முடியாது அல்லது ஆண்மகன் அழக்கூடாது, ஓர் ஆண்மகன் இளஞ்சிவப்பு நிறத்தை அணிய மாட்டான். ஓர் ஆண்மகன் அப்படி நடக்கக்கூடாது… என்று எனது பெண்மையின் மீது மிகக் பெரிய கட்டுப்பாடு இருந்தது,§ என்று நிக்கி கூறுகிறார்.
பெரும்பாலான ஆசியக் குடும்பங்களில் உள்ளதைப் போலவே மலேசிய இந்தியக் குடும்பங்களிலும் அதிகமான கட்டுப்பாடுகள் உள்ளது.
※ஓர் ஆசியக் குடும்பத்தில், குடும்பப் பிணைப்பு பொதுவாக மிகவும் வலுவாக இருக்கும், மேலும் அது &நீங்கள் குடும்பத்தைப் பெருமைப்படுத்த வேண்டும்* போன்ற கருத்துகளை விதைக்கிறது§ என்று LGBTQ ஆர்வலர் சோங் யீ ஷான் கூறுகிறார், ※இது வெட்கப்படக்கூடிய ஒன்று§ என்ற சிந்தனையும் உள்ளது.
நம்பிக்கையும் விளைவும்
கெவின் (அவரது புனைப்பெயர்) அவரது அனுபவம் கண்டிப்பான குடும்பங்களைக் கொண்டவர்களிடமிருந்து பெரிதாக வேறுபட்டு இல்லை என்று விளக்குகிறார். இருப்பினும், அவரது அடையாளத்துடன் தன்னை வெளிப்படுத்த கடினமாக்கியது என்னவென்றால், அவர் வளர்ந்த குடும்பத்தில், ஒருவரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பேசுவதற்கு வழியே இருந்ததில்லை.
கிறிஸ்துவராக வளர்க்கப்பட்டதிலும் சில கட்டுப்பாடுகள் இருக்கவே செய்தன.
அதனால்தான், 23 வயதில், அவர் இணையத்தின் கூகுள் தேடலில் தனது முக்கியமான கேள்வியை தட்டச்சு செய்தார்: நான் மகிழ்வனாக இருப்பது சரியா?
※அது சரியா மகிழ்வனாக மற்றும் கிறிஸ்துவராக இருப்பது) என்பதை என்னால் எவ்வளவு உறுதிப்படுத்த முடியுமோ அவ்வளவு உறுதிப்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் என் எண்ணங்கள் உணர்வுகள் அதற்கான பதிலை நோக்கி சென்றது … நான் நேர்பாலினத்தவராக இருக்க விரும்பினேன். ஆனால் நான்அப்படி இல்லை என்று தெரிந்த ஒரு உணர்வு என்னுள் இருந்தது. ஆனால் நான்
புதுநராக என்னை அடையாளப்படுத்தி வெளியே வரும் வரை அது பற்றி (எனக்கு) தெளிவாகத் தெரியவில்லை,§ என்று அவர் கூறுகிறார்.
கெவினின் முரண்பட்ட உணர்ச்சிகள் புரிந்துகொள்ளக்கூடியவை. எல்லாவற்றிற்கும் மேலாக, அனைவரும் இல்லையென்றாலும் பெரும்பாலான, கிறிஸ்துவ நம்பிக்கை உள்ளவர்கள், இதர கிருஸ்துவ உட்பிரிவினரும் ஓரினச்சேர்க்கையை ஒரு பாவமாக கருதுகின்றனர். இந்நிலைமை இந்து மதத்தில், குறைவான சிக்கல்களைக் கொண்டது என்றும் கூறிவிட முடியாது.
ஜஸ்டிஸ் போர் சிஸ்டேர்ஸ் (Justice for Sisters) நிறுவனர் திலக சுலேத்திரா கூறுகையில், குறிப்பாக இந்து-இந்திய சமுதாயத்தில் திருநங்கைகளை தெய்வமாக்குவதையும், அது எப்படி மாறுபட்ட புதுநர்களை அதிக அளவில் ஏற்றுக்கொள்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
தங்களுக்குத் தெரிந்த ஒரு திருநங்கையின் அனுபவத்தை திலகா விவரிக்கிறார்: ※இந்தப் பெண் அடிக்கடி கோவிலுக்குச் செல்வார், மேலும் (பக்தர்கள்), இளம் தம்பதிகள் அல்லது குழந்தைகளைப் பெற விரும்பும் நபர்கள் , அவரிடம் ஆசி கேட்கிறார்கள். கிள்ளானில் ஒரு கோயில் உள்ளது, அங்கு ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன, மேலும் திருநங்கைகள் பச்சைப் புடவைகளில் அந்த பெண் தெய்வத்திற்கான திருவிழாவைக் கொண்டாட வருகிறார்கள்.
இருப்பினும், ஒரு திருநங்கையான தரணி (அவரது புனைப்பெயர்) சொல்வது போல், எங்களைப் போன்றவர்களை ஏற்றுக்கொள்வது சுலபமானதோ அல்லது எளிமையானதோ அல்ல
மலேசிய இந்தியர்கள் திருநங்கைகளை கேலியாகப் பார்க்கிறார்கள் என்று தரணி விளக்குகிறார். தன்னை ※ஒம்பது§
(ஒம்பது/ ஒம்போது/ஒன்பது :பெண்மை தன்மையுடன் இருக்கும் ஆண்களுக்கான இழி சொல்) என நண்பர்கள் , குடும்ப உறுப்பினர்களால் கூட கேலிப் பெயர்களுடன் அழைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். இதைவிட மோசமாக, அவளை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களில் ஒருவர் தனது சொந்த தந்தை என்று அவர் கூறுகிறார்.
※நீ ஏன் &ஒம்பது* போல நடந்துகொள்கிறாய்? என்று கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தியுள்ளார் என் அப்பா.
இருப்பினும், ஒரு அசைக்க முடியாத பக்க பலமாக தனக்கு ஆதரவளித்த – தன் தாய்க்கு நன்றி கூறுகிறார், தரணி. தான் ஒரு ஆண் உடலில் வாழும் பெண் என்பதை என் தாய்க்கு உணர்த்த தனக்கு நான்கு ஆண்டுகள் ஆனது என்று தரணி கூறினார்.
இனம், வர்க்கம் குடும்பம்
மலேசியாவுக்கு (முன்பு மலாயா) இந்தியர்களின் இடம்பெயர்வு 19 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது, அப்போது தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். அடிப்படையில், காலனித்துவ அதிகாரிகளும் பெருந்தோட்டத் தொழில்துறையும் இந்திய தொழிலாளர்களை, அவர்கள் இழந்த அடிமைகளுக்கு ஒரு நீண்ட கால, மலிவான, நம்பகமான தீர்வாக கண்டனர். இது விரிவடையும் பிரிட்டிஷ் நிலத்தின் தேவைகளையும் பிரிட்டிஷ் பேரரசின் விரிவாக்கத் திட்டத்தை பூர்த்தி செய்ய முடிய வல்லது.
இருப்பினும், காலனித்துவ மற்றும் பிந்தைய மலேசியா இரண்டையும் வளர்ப்பதில் சமூகத்தின் பங்கு மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு பெரிய மலேசிய சமூகத்திற்கான முயற்சியாக இருந்தபோதிலும், பெரும்பான்மையானவர்கள் ஏழைகளாவும், அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலிருந்து விலக்கப்பட்டதாகவும் உணர்கிறார்கள்.
இது, சமூகத்தின் சில கலாச்சார பண்புகள், நடைமுறைகள் மற்றும் சிரமமான சிக்கல்களுடன் சேர்ந்து, மலேசிய இந்திய புதுநர்களுக்கு , பெரும்பாலும் சமாளிக்க முடியாத முரண்பாடுகளை எதிர்கொள்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதனால்தான் பலர் தங்கள் உண்மையான சுயத்தை மறைக்க தேர்வு செய்வதும், குறிப்பாக தங்கள் குடும்பங்களால் ※பிடிபடுவோம்§ என்ற பயத்தில் வாழவும் செய்கிறார்கள் என்று கெவின் விளக்குகிறார்.
தனது தந்தை அவரை ஒரு சுவரில் அழுத்தி , ※ஓரினச்சேர்க்கையாளராக (மகிழ்வனாக) இருக்கக்கூடாது§ என்று கட்டளையிட்ட இளமை பருவத்தின் வலி மிகுந்த சம்பவத்தை பற்றி அவர் விவரிக்கிறார்.
ஒரு நாள், தந்தையும் மகனும் குடும்ப வீட்டின் வரவேற்பறையில் பேசிக் கொண்டிருந்தபோது, எந்தக் காரணமும் இல்லாமல், திடீரென்று கெவினின் தந்தை அவர் மீது குற்றம் சாட்டினார். ※அவர் என் முகத்தில் ஒரு விரலை வைத்து , நான் ஓர் ஓரினச்சேர்க்கையாளராக (மகிழ்வனாக) இருக்கக்கூடாது என்று கூறினார். & எல்லோரையும் போல இயல்பாக இரு*. நான் பயத்தின் உச்சத்தில் இருந்தேன் , ※என்று அவர் நினைவு கூர்ந்தார்.
இருப்பினும், கெவினின் தந்தை அவரைத் தாக்கியது ※தூண்டுதலற்றது§ அல்ல. ※அவமானம்- ※மற்றவர்கள் என்ன சொல்வார்கள்?§ மற்றும் ※எல்லோரும் போலவும் இரு, எதையும் மாற்றாதே§ போன்ற கலாச்சார கருத்துக்களுடன் இது தொடர்புடையதாக இருக்கலாம்.
ஜே.எஃப்.எஸ்ஸின் திலகா விளக்குகையில் : ※பொதுவாக, புதுநர்கள் தங்கள் சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள், இந்திய புதுநர் பெண்கள் பெரும்பாலும் இந்திய ஆண்களால் துன்புறுத்தப்படுகிறார்கள். அங்கு உள்ளே ஆணாதிக்கம் இருக்கிறது. இதற்கிடையில், சிலருக்கு, நாங்கள் ஏற்கனவே ஒடுக்கப்பட்டுவிட்டோம் (எனவே) நாங்கள் மேலும் அவமானத்தை கொண்டுவரக்கூடாது, என்ற உணர்வு உள்ளது.
மிகவும் வசதியான, ஆங்கிலம் பேசும் இந்திய மலேசியர்கள் பன்முகத்தன்மைக்கு அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பது எப்போதும் பின்பற்றப்படுவதில்லை, என்று அவர்கள் மேலும் விளக்குகிறார்கள்.
※சில உயர் மற்றும் நடுத்தர வர்க்க வீடுகளில் கூட, புதுநர்களை மாற்றும் நடைமுறைகளும், ※சடங்குகளும்§ நடப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். சாமியார்களிடம் சென்று சடங்குகளைச் செய்வதற்கும் ,*புவாங் சியால்* (துரதிர்ஷ்டத்தை நீக்குவதற்கும்) அழைத்துச் செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளன, ※என்று அவர்கள் கூறுகிறார்கள்.
எது எப்படியிருந்தாலும், தொழிலாளர் வர்க்க தனிநபர்கள் தங்களை புதுநர்களாக வெளியே காட்டிக்கொள்ளும் போது நிறைய வன்முறைகளை எதிர்கொள்கின்றனர் என்பதுதான் உண்மை. எவ்வாறாயினும், எப்போதும் இதில் பல கட்டங்கள் உள்ளன, மேலும் புதுநர்கள் தங்கள் தொழிலாளர் வர்க்க பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல நிகழ்வுகளும் உள்ளன, ※என் குழந்தை இப்படி (புதுநராக ) இருப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை§ என்று அவர்கள் உணரத் தொடங்குகிறார்கள்.
உள் பாகுபாடு
மலேசிய இந்திய புதுநர்கள் அனுபவிக்கும் பாகுபாடு, மற்ற புதுநர்களை அவர்களே ஒதுக்கப்படுவதுவது வரை செல்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உண்மையில் இந்திய மலேசியர்களிடையே பரவலாக புதுநர்கள் ஒதுக்கப்படுவது தெரிகிறது.
※நான் நடந்து செல்லும்போது மக்கள் என்னைத் தவிர்த்தனர்; என்னை வெறுப்புடன் பார்த்துள்ளனர். நான் ஒரு இந்திய மகிழ்வன் என்பதால் பல்கலைக்கழகத்தில் பாடங்களை குழு பணிகளைச் செய்வது கடினம். புதுநர் சமூகம் கூட உண்மையில் இனவெறியின் மனநிலையிலிருந்து வளரவில்லை. இன்னமும் இந்தியர்கள் அசுத்தமானவர்கள், அழகானவர்கள் இல்லை, ※ என்ற எண்ணங்கள் பபுதுநர்களிடையே உள்ளது, என்று ஸ்மித் கூறுகிறார், (அவரது உண்மையான பெயர் அல்ல).
இதை திலகா உறுதி செய்கிறார்.
※சில &டேட்டிங்* (dating) தளங்களை நீங்கள் பயன்படுத்தினால் , &கருப்பானவர்கள் வேண்டாம் &, &இந்தியர்கள் அல்லது இந்த இனத்தினர் வேண்டாம் &, அல்லது வேறு சில இனவெறி கொண்ட செய்திகளைப் பெறலாம். அந்த வகையில், வெளி சமூகத்தில் நடப்பது போன்று, புதுநர் சமூகத்திற்குள் அந்த வகையான நிறவெறியையும் இனவெறியையும் நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். அது புது உறவுகளையும், துணையையும் கண்டுபிடிப்பதற்கான உங்கள் வாய்ப்பை கட்டுப்படுத்துகிறது.
வெளியே வருவது
மலேசிய இந்திய புதுநர்கள் பல சவால்களை எதிர்கொண்டு தங்கள் உண்மைத் தன்மையை அடக்கிக்கொண்டு தங்களை வெளிக்கொணர முடியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
ராகவ் (அவரது புனைப்பெயர்) ஒரு உள்ளூர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப மாணவர், அவர் தன்னைப் பற்றி ஊராருக்கு தெரிவிப்பேன் என்று தான் நினைத்ததில்லை என்று கூறுகிறார். அவர் தனது சுயத்தை குடும்பத்திற்கு வெளிப்படுத்துவது பற்றி பல ஆண்டுகளாக விவாதித்தார். ஒரு தருணத்தில் எதிர்பாராத, விதமாக அவரது நண்பர், தன்னை பற்றிய உண்மையை அவரது குடும்பத்தினருக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
முதலில் சங்கடமாக இருந்தது. இருந்தாலும், அவர் குடும்பத்தின் நேர்மறை அரவணைப்பும், ஏற்புடைமையும் அவரை அலாதியான உணர்ச்சிக்கு ஏற்படுத்தியது என சொன்னார்.
அவர்கள் கண்ணோட்டங்கள் மாறுபட்டு இருந்தபோதிலும், அவர்களுடைய தன்நலமற்ற அன்பும், அவரை ஏற்றுக் கொண்டதும், அவரது நம்பிக்கையை உயர்த்தியது என்று கூறுகிறார். அது, தன்னை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
※அவர்கள், எதுவாக இருந்தாலும், நாங்கள் உனக்காக மகிழ்வாக இருக்கின்றோம்§ என்றார்கள்.§
ராகவின் கதையில் உள்ள ※பிரச்சனை§ என்னவென்றால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைக் கணிப்பது கடினம். முக்கியமாக, ராகவை அவர்கள் ஏற்றுக் கொள்வது என்ற நிலை எப்போதும் இருக்காது; அது நல்லதொரு தன்மையிலும் இருக்காது.
உதாரணமாக, ஸ்மித் என்பவர், ஆண்கள் மருதாணி, காதணிகள் அணிவது கூட தடை செய்யும் குடும்பத்தினர் தங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்ற சிறிய நம்பிக்கையைக் கொண்டுள்ளார். உண்மையில், ஸ்மித்தை அவர் குடும்பம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ※எந்த வித்தியாசமும் இல்லை§ என்று அவர் கருதுகிறார்.
இதற்கிடையில், கெவின் தனது குறிப்பிட்ட சூழ்நிலையில் சிறந்த தீர்வாக அவர் உண்மையில் யார் என்பதை அவரது சக ஊழியர்களிடமிருந்தும் அறிமுகமானவர்களிடமிருந்தும் மறைப்பதாகும். இது சிறந்ததல்ல என்பது அவருக்குத் தெரியும். ஆனால் இப்படி தான் அவர் அதை சமாளிக்க முயன்றார்.
※ஒரு நல்ல மகன், கணவன் அல்லது தந்தையாக எங்கள் குடும்பத்தில் வாழ்வதற்கு நாங்கள் மிகவும் கடினமாக முயற்சி செய்வதால், பல ஏமாற்றங்களுக்கு நாங்கள் ஆளாகிறோம்,§ என்று அவர் கூறுகிறார். ※… இதனை மாற்றியமைக்க எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். அது இன்னும் பெரும் விளைவுகளை உண்டாக்கலாம். நம்மில் சிலர், உண்மை காதல் என்றால் என்ன, மனிதனாக இருப்பது என்றால் என்ன. என்பதை மறந்துவிட்டோம்; இந்த அகன்ற வரம்பிலான உணர்ச்சிகள் ,ஆசைகளை உணர நமக்கு அனுமதி உண்டு§ என்பது உட்பட.
இதில் வருந்தத்தக்கது, காதல் என்றால் என்ன என்பதை ஒருவர் மறந்துவிட்டால், ஒருவர் தன்னை நேசிக்க மறந்துவிடுகிறார். தாரணி 14 வயதில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றபோது அனுபவித்தது இதைத்தான்.
※எனக்கு தொடர்ந்து வாழ விருப்பம் இல்லை, ஏனென்றால் என்னால் இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை,§ என்று அவருக்கு தற்கொலை எண்ணம் முன்பு வந்ததை, அவர் விவரித்தார்.
ஆதரவு எங்கே?
சமீப காலமாக மலேசியாவில் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் மிகப் பெரிய உயர்வைக் கண்டுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலை நகரமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் அதிகரித்த மன அழுத்தம் காரணமாக மட்டும் அல்ல. குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்களின் மோசமான காலத்தில், தற்கொலைகளும் அதிகரித்துள்ளன.
இதற்கு மத்தியில், பல LGBTQ நபர்கள், தங்களின் மனநலச் சவால்களை சொல்ல வழியில்லாமல் தங்களது சோகங்களை தங்களுக்குள் புதைத்துக் கொள்ளும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
புதுநர்களுக்கான பாதுகாப்பான மனநலச் சிகிச்சையை அளிப்பதற்கான சுகாதார வசதிகளின் தேவைகள், அதி முக்கியம் என இதன் மூலம் தெரிகிறது . எனவேதான் LGBTQ தரப்பினருக்கு உடன்பாடான சிகிச்சை குறித்து அதிகமாக பேசப்படுகின்றது.
சுருக்கமாக, சொல்ல வேண்டுமென்றால் இது போன்ற சிகிச்சை என்பது ஒரு வகையான உளவியல் சிகிச்சையாகும், இது புதுநர் உணர்வாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிகிச்சையாளர்கள், பொதுவாக தாங்கள் சேவை பெரும் LGBT தரப்பினர்களை அவர்களின் அடையாளங்களையும் செயல்பாடுகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள்; LGBTQ தனிநபர்கள் தங்களின் உணர்ச்சிகள், ஈர்ப்புக்கள் போன்றவற்றை நலமாக உணர உதவுவதே இதன் நோக்கம், பிற்காலத்தில் இது, ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
இருப்பினும், மலேசியாவில் உள்ள பிரச்சனைகளில் ஒன்று என்ன என்றால், நம்மிடம் பல LGBTQ- உடன்பாடான சிகிச்சைக்கான உளவியலாளர்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் LGBTQ மலேசியர்கள் சிறுபான்மையினர் மன அழுத்தத்திற்கும் பாரபட்சத்திற்கும் உட்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் உதவியையும் பெறுவதில்லை, என்பதே இதன் சாத்தியம்.
சிறுபான்மையினர் மன அழுத்தம் என்பது, குறிப்பாக பாலியல் ரீதியிலான சிறுபான்மையினரான LGBT தரப்பினருக்கு தனித்தன்மை வாய்ந்த, வன்முறை சார்ந்த அழுத்தங்களாகும். ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு, பழிவாங்கல் போன்ற மனித நேயத்துக்கு விரோதமான அழுத்தங்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர், மேலும் இவை அவர்களது ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
※சிறுபான்மையினராக இருப்பதால், நாங்கள் கூடுதல் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறோம், என்கிறார் திலகா. ஏனென்றால் ஒன்று, நாங்கள் குற்றவாளிகளாக கருதப்படுகிறோம். அதனால், வெளியே செல்லும்போது கூடுதல் பயம் இருக்கிறது. நாங்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டால், பாகுபாடான தண்டனை வழங்கப்படலாம். அந்தப் பாகுபாட்டைச் சமாளிக்க அரசு அல்லது நிறுவனங்களின் மீது எங்களுக்கு குறைவான நம்பிக்கையே உள்ளது.
※அந்த வகையில், அதிகமான பயமும் , நாங்கள் தனிமைப்படுத்தப் படுகிறோம் என்ற உணர்வும் உள்ளது . பல சமயங்களில், அது மன அழுத்தத்தில் கொண்டு விடுகிறது. இதில் மலேசிய இந்திய புதுநர்களுக்கு, ※இரட்டிப்பு அளவிலான ஒடுக்குதல்§ உள்ளது.
※மற்ற இனங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய இந்திய LGBTQக்கள் அதிக பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். மேலும் ஒரு B40 இந்திய LGBTQ நபர்
அதிதீவிரமான பாகுபாட்டை எதிர்கொள்கிறார்,§ என்று யீ ஷான் கூறுகிறார்.
※மேலும், பல மலேசிய இந்திய LGBTQ தனிநபர்களுக்கு மொழித் தடை மற்றொரு பிரச்சினையாக உள்ளது, ஏனெனில் அவர்கள் சமூக ஆதரவு, சட்ட ஆதரவு, மனநல ஆதரவு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தரவுக் குறிப்புகள் குறைவாகக் கொண்டுள்ளனர்.
※எனவே அவர்களின் பாலியல் அல்லது பாலின அடையாளத்தின் காரணமாக அவர்கள் பாகுபாட்டிற்கு ஆளாகும் போது, எங்கு ஆதரவைப் பெறுவது என்று அவர்களுக்குத் தெரியாது, அத்துடன் அவர்கள் ஆதரவைப் பெற முடியும் என்றும் அவர்களுக்குத் தெரியாது.§ என்பது மிகவும் கொடுமையான ஒரு நிலையாகும்..
மன அழுத்தம், பாகுபாடு அல்லது LGBTQ எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றுக்கு இடையே அப்பட்டமான தொடர்பு இருப்பதாக திலகா கூறுகிறார். இதன் விளைவாக, மலேசிய இந்திய LGBTQ சமூகத்தினர் பொதுவாக சுய-தணிக்கையை மேற்கொள்கின்றனர். மேலும் இணையத்திலோ அல்லது பொது நிலையிலோ வெளிப்படையாக விஷயங்களைக் கூறுவதைத் தவிர்க்கின்றனர்.
அதனால்தான், சுய கவனிப்பும் ,சிகிச்சையாளர்களுடன் பேசுவதும் அவசியம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆயினும்கூட, உதவி என்பது சிகிச்சையாளர்களை அணுகுவது மட்டுமல்லாது, LGBTQ-உடன்பாடான
குழுக்களையும் தாங்கள் நாட வேண்டும்.
※இப்போது மனித உரிமைக் குழுக்கள் LGBTQ குழுக்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் இருக்கிறோம். அவர்கள் உங்களை இணைக்க முடியும். பல மனித உரிமைக் குழுக்கள், புதுநர் தரப்பினர்களுக்கு ஆதரவு அளிக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம், மேலும் ஒருவருக்குத் தேவையான சேவைகளையும் ஆதரவையும் அவர்களால் வழங்க முடியும்.§.
திலகா, யீ ஷான் ஆகியோர் வலியுறுத்துவது, தாங்கள் நேரடியாக இந்த உதவிகளை வழங்குவதில்லை, மாறாக மலேசிய LGBTQ தனிநபர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தயாராக உள்ள தரப்பினர்களுக்கு வழி காட்டுகிறோம் என்று கூறுகின்றனர்.
திலகா கூறுகிறார்: ※அதை &உதவி* என்று நான் சொல்லமாட்டேன், ஏனென்றால் நானும் ஒரு புதுநர். நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என்னை மேம்படுத்துகிறது. நானும் இதற்கு விலக்கல்ல.
.
மீட்சியும் நம்பிக்கையும்
சிக்கல்களும் , நுணுக்கங்களும் மிக்க மலேசிய இந்திய புதுநர்களின் அனுபவங்களுக்கு ஒரே மாதிரியான தீர்வு இல்லை. இதனால்தான் சில புதுநர்கள் அவர்களின் தற்கால, எதிர்கால வாழ்க்கையை பற்றி நேர்மறையாக இருக்கின்றனர். ஆனால் , அவர்கள் அனைவரும் இதேபோல் உணர்வதில்லை.
※திரும்பிப் பார்க்கும்போது, இந்த அனுபவங்கள் என்னை மிகவும் வலிமையாகவும், மீட்புத்திறன் கொண்டவராக ஆக்கியுள்ளன, அதனால்தான் நான் விரும்பியதை செய்கிறேன்§ என்று நிக்கி கூறுகிறார். ※இப்போது யாராவது என்னிடம் ஏதாவது சொன்னால், நான் எதிர்த்துப் போராடுவேன்.§
இருப்பினும் ராகவ்விற்கு அவ்வளவு உறுதி இல்லை. அவர் தனது குடும்பத்தின் முழு ஆதரவைப் பெறுவது அதிர்ஷ்டவசமானது என்றாலும்; மலேசியா, LGBTQ நபர்களை புறக்கணிப்பது என்பது நிதர்சணமான உண்மை. இதனாலேயே அவரால் இங்கு தனக்குண்டான எதிர்காலத்தைப் பார்க்க முடியவில்லை.
இதற்கிடையில், ஸ்மித், கிடைக்கும் சிறிய ஆதரவின் மீது கவனம் செலுத்துவதே மிக முக்கியமானது என்று கூறுகிறார்; மலேசிய இந்திய LGBTQ நபர்களுக்கு இங்குள்ள குழுக்கள், தனிநபர்கள் வழங்கும் ஆதரவு, பலருக்கு பயனுள்ள நேர்மறை அனுபவங்களை தந்துள்ளது.
அவர்கள் ஹாரி பாட்டர் அண்ட் தி ப்ரிசனர் ஆஃப் அஸ்கபானில், பேராசிரியர் ஆல்பஸ் டம்பில்டோரைப் பொழிப்புரை செய்கிறார்கள்: ※இருண்ட காலத்திலும் ஒளியை காண இயலும்- ஒருவர் விளக்கை இயக்கினால்§
நீங்கள் சோர்வாக இருந்தால், உதவி தேவைப்பட்டால் அல்லது நீங்கள் பேசுவதை கேட்ட ஒருவர் தேவைப்பட்டால், நீங்கள் LGBTQ- உடன்பாடான, இங்கே பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களையும் மனநலச் சேவை மையங்களையும் தொடர்புகொள்ளலாம்.
www.justiceforsisters.org/balik-pangkal-jalan/support
பீஃபிரண்டர்ஸ் (Befrienders)
0376272929
https://www.befrienders.org.my
சினேகம் வெல்ஃபேர் ஆர்கனைசேஷன் மலேசியா
(Sneham Welfare Organisation Malaysia)
0102005722
Sneham Malaysia FB Page
மலேசியன் மெண்டல் ஹெல்த் அசோசியேஷன்
(எம்.எம்.எச்.ஏ)
Malaysian Mental Health Association (MMHA)
0327806803
https://mmha.org.my
கே.கே.எம்- மெர்சி மலேசியா ஹாட்லைன்
(KKM-Mercy Malaysia Hotline)
0329359935
தாலியான் காசே
(Talian Kasih)
15999
எழுத்து வடிவமைப்பு
முதன்மையான படத்தை, வெஷாலினி நாயுடு வரைந்துள்ளார்
வெஷாலினி, மலேசியாவில் இனம், பாலினம், பாலியல் ஆகியவற்றின் ெளிப்பாட்டிற்கு இணக்க, கவிதை, காட்சிக் கலைகள் , நாடகங்களை ஒன்றிணைக்கும் பன்முக கலைஞர்.
***
A collaboration with Queer Malaysian Indians, Vaneesha Krishnasamy, Between The Lines Media, ILGA Asia, Canva & glifaa Small Funds Grant
Queer Malaysian Indians is a social and networking collective for those who primarily identify as Malaysian Indians and LGBTQIA. As a flat structure group, the aim of QMI is to empower, share knowledge and support the Malaysian Indian LGBTQ+ community, a minority within a minority.
Vaneesha of #DepthOfV and 22 Hub is a multimedia producer & journalist,whose passion for advocacy and conceptual art inspires her visuals and their accompanying narratives. Using both audio visuals and stills, she encourages oppressed communities like hers to take up space through honest storytelling, in a world that often expects their silence. Her hope is to create new alternative mediums of art, expression and discourse, to break systemic and societal barriers that work against them. She is currently a Canva Represents Featured Artist, one of their South East Asian creatives chosen to help them populate the internet with accurately diverse images of people from her community.
Between The Lines is an independent media platform in Malaysia that reports and digs into issues that require a second look, louder voices, longer explanations and a fresh take.
ILGA Asia is the Asian Region of ILGA World, representing more than 100 member organisations in Afghanistan, Bahrain, Bangladesh, Bhutan, Brunei Darussalam, Cambodia, China, Democratic People’s Republic of Korea, India, Indonesia, Islamic Republic of Iran, Iraq, Israel, Japan, Jordan, Kuwait, Lao People’s Democratic Republic, Lebanon, Malaysia, Maldives, Mongolia, Myanmar, Nepal, Oman, Palestine, Pakistan, Philippines, Qatar, Republic of Korea, Saudi Arabia, Singapore, Sri Lanka, Syrian Arab Republic, Taiwan, Thailand, Timor-Leste, United Arab Emirates, Viet Nam and Yemen.
Canva is an online designing and publishing tool with a mission to empower everyone in the world to design anything and publish everywhere. In true spirits of inclusivity, Canva has been actively working alongside numerous creatives from many different communities across the globe, to populate their platform and the internet with a diverse range of faces and cultures, so everyone using their platform can feel represented all while broadening the very definition of stock images.
glifaa (Gays and Lesbians in Foreign Affairs Agencies) is the officially recognized organization representing lesbian, gay, bisexual and transgender etc. (LGBT+) personnel and their families in the United States Department of State, U.S. Agency for International Development (USAID), Foreign Commercial Service, Foreign Agricultural Service, and other agencies and entities working in foreign affairs in the U.S. Government. The glifaa Small Grants Fund provides a mechanism to reimburse glifaa post representatives for expenses incurred in support of host-country LGBTQIA+ advocacy organizations or events.
22 Hub Sdn. Bhd is a creative agency hoping to make space for a diverse range of artists, by providing physical spaces for creative explorations whilst creating a network for collaborative ventures. It is their hope to find balance in a capitalistic society by supporting and uplifting creative communities in the most compassionate, equitable and ethical manner so they may continue to sustainably thrive.
Veshalini Naidu is a multidisciplinary artist who merges poetry, visual arts and theatre in their response to gender, sexuality and race in Malaysia. @veshnaidu
All images are copyrighted to their respective photographers. All written material is copyrighted to their respective writers. No part of this document may be reproduced or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without prior written permission of their respective copyright owners.
ILLUSTRATOR (BTL Report): Veshalini Naidu
“I wanted to capture how much care and vigilance it takes, even in our most mundane moments. The way these two young queer people blend into their environment under the cover of night and trees, just to sit with each other in peace. Our joy comes with a cost, but that does not mean we won’t find pockets to feel them.”
TRANSLATOR: Vijaya Ratinam Ramah
Twitter @QMIMalaysia
qmi.org@gmail.com